Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலச்சரிவால் ஆற்றில் கவிழ்ந்த பேருந்துகள்..! 7 இந்தியர்கள் உள்பட 63 பேரின் கதி என்ன.?

Senthil Velan
வெள்ளி, 12 ஜூலை 2024 (17:09 IST)
நேபாளத்தில் கனமழை காரணமாக 63 பயணிகளுடன் கவிழ்ந்த பேருந்துகளில் 7 இந்தியர்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
மத்திய நேபாளத்தில், ஓடிக்கொண்டிருக்கும் திரிசூலி நதியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால், அதன் கரைப்பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டு, அருகிலிருந்த நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது அவ்வழியாக வந்த   2 பேருந்துகள்  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 
 
இந்த பேருந்துகளில் ஓட்டுநர்கள் உள்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதில் 7 பேர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய ஒரு பேருந்து காத்மாண்டு சென்று கொண்டிருந்த ஏஞ்ஜெல் பேருந்து என்பதும், அதில் 24 பயணிகள் இருந்ததாகவும், மற்றொரு பேருந்து காத்மாண்டுவிலிருந்து ரௌதஹத் அருகே கௌர் பகுதிக்கு வந்துகொண்டிருந்ததாகவும், இதில் 41 பயணிகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
 
காத்மாண்டு வந்துகொண்டிருந்த பேருந்தில் இருந்த 21 பயணிகளில் ஏழு பேர் இந்தியர்கள் என்று தெரிய வந்துள்ளது. இந்த பேருந்து ஆற்றுக்குள் கவிழ்வதற்கு முன்பே, அதிலிருந்து குதித்து மூன்று பயணிகள் காயத்துடன் உயிர்தப்பியதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

ALSO READ: மதுவிலக்கு சட்ட மசோதாவிற்கு ஓகே..! தமிழக ஆளுநர் ஒப்புதல்.!!
 
விபத்து நேரிட்ட இடத்தில் மண் சரிவுகளை அகற்றும் பணியும், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில், படகுகளில் சென்று பயணிகளை தேடும் பணியிலும் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டதாகவும், சாலை முழுக்க நிலச்சரிவினால் மூடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12th முதல் டிகிரி வரை.. ரயில்வேயில் 11,558 பணியிடங்கள்..! - உடனே Apply பண்ணுங்க!

அடுத்த 3 மணி நேரத்திற்குள் 5 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

பிளாஸ்டிக், அலுமினியம் ஃபாயில் காகிதங்களில் உணவு பொட்டலம்.. மலட்டுத்தன்மை ஏறப்டும் என எச்சரிக்கை..!

27 நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக கழன்று ஓடிய 3 பெட்டிகள்: பயணிகள் அதிர்ச்சி;

அடுத்த கட்டுரையில்
Show comments