Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளத்தில் மிதக்கும் இந்தோனேசியா: 19 பேர் பலி

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (16:23 IST)
இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. இதில் 19 பேர்  உயிரிழந்துள்ளனர்.

 
இந்தோனேசியா நாட்டில் உள்ள ஜாவா தீவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. குறிப்பாக, கருட், சுமேடாங் மாவட்டங்களில் 24 மணிநேரமாக தொடர் மழை பெய்து வருகிறது.  மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கி உள்ளது. இப்பகுதியை சுற்றியுள்ள சுமார் 100 கிராமங்களை சேர்ந்த மக்கள்  வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
மேலும், கருட் மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு சார்ந்த விபத்துகளில் சிக்கி 8 மாத கைக்குழந்தை உள்பட 6 குழந்தைகளும், 7 பெண்களும் உயிரிழந்தனர். சுமேடாங் மாவட்டத்தில் ஆறுபேர் பலியாகியுள்ளனர். 
 
இரு மாவட்டங்களிலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் காணாமல் போன 10க்கும் அதிகமானவர்களை மீட்கும் நடவடிக்கையில் பேரிடர் நிவாரணப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments