Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உலகின் வேகமான வாலில்லா வெளவால்: மணிக்கு 160 கி.மீ. வேகம்!!

உலகின் வேகமான வாலில்லா வெளவால்: மணிக்கு 160 கி.மீ. வேகம்!!
, திங்கள், 14 நவம்பர் 2016 (11:28 IST)
உலகில் மிக வேகமாக பறக்கக்கூடிய வால் இல்லா வெளவால் இனத்தை பிரேசில் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.


 
 
பிரேசில் நாட்டில் காணப்படும் வால் இல்லா வெளவால்கள் தான், உலகிலேயே அதிவேகமாக பறக்ககூடிய வெளவால் என ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். இந்த வெளவால்கள் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் பறக்ககூடியவை.
 
அளவில் மிகச்சிறியதாக இருக்ககூடிய இந்த வகை வெளவால்கள், மிக வேகமாக பறக்கக் கூடியதற்கு ஏற்றவாறு உடலமைப்பை பெற்றுள்ளன.
 
மேலும் இவற்றின் சிறிய உருவம், எடை குறைந்த எலும்புகள், பெரிய இறக்கை ஆகியவற்றால் இவை அதிக வேகத்தில் பறக்கின்றன.
 
இந்த வெளவால்களில் உடலில் ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களை பொறுத்தி, வால் இல்லா வெளவால்களின் பறக்கும் வேகத்தை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டுள்ளனர். 
 
உலகிலேயே ”பெரிக்ரைன் ஃபால்கான்ஸ்” என்ற பறவை அதிவேகமாக பறக்கக் கூடியவை. இது மணிக்கு 360 கி.மீட்டர் வேகம் வரை செல்லும் என்பது குறிப்பிடதக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கரையான் தின்றுவிட்டதா? - காங். தலைவருக்கு ரூ.56.67 கோடி அபராதம்