Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புளோரிடாவை தாக்கிய மைக்கேல் புயல் – அமெரிக்காவில் 13 பேர் பலி

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (12:16 IST)
அமெரிக்காவில் சக்தி வாய்ந்த மைக்கேல் புயலுக்கு இதுவரை 13 பலியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நேற்று 130 கிலோமீட்டர் வேகத்தில் மைக்கேல் புயல் தாக்கியது. இதனால் அங்கிருந்த மரங்கள் வேறோடு பிடுங்கி எறியப்பட்டன. பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

புயலில் மின்சாரக்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். புயல் தாக்கியப் பகுதிகளில் உள்ள மக்களை வேறு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

புளோரிடா மாகாணத்தைத் கடந்த இந்த புயல் தற்போது ஜார்ஜியா மாகாணத்தைத் தாக்கி அங்கும் பலத்த சேதத்தை விளைவித்துள்ளது. மைக்கேல் புயலுக்கு இதுவரை 13 பேர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

உலகில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பூனை? எங்கே தெரியுமா?

வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்தேன்: ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு.. புதிய அதிபராகிறார் முகமது முக்பர்..!

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை: ஊடகங்கள் அதிர்ச்சி தகவல்..!

சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும்: அகிலேஷ் யாதவ் ஆவேச பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments