Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

1200 விலையுயர்ந்த கார்களை ஏற்றி வந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது

1200 விலையுயர்ந்த கார்களை ஏற்றி வந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது
, செவ்வாய், 6 ஜனவரி 2015 (11:14 IST)
இங்கிலாந்தின் சௌதம்ப்டன் துறைமுகத்தில் 1200 விலையுயர்ந்த விளையாட்டுக் கார்களுடன் வந்த சரக்குக் கப்பல் கவிழ்ந்தது.
 
இங்கிலாந்தில் உள்ள சௌதம்ப்டன் துறைமுகத்தில் ஹோக் ஒசாகா என்ற சரக்கு கப்பல் 1200க்கும் மேற்பட்ட ’ஜாக்குவார் லேண்ட் ரோவர்’ எனப்படும் விலையுயர்ந்த விளையாட்டுக் கார்கள், 80 கட்டுமான பாகங்கள், ஜே.சி.பி. எந்திரங்கள், கிரேன்கள் உள்ளிட்ட 4600 டன்களுக்கும் அதிகமான இயந்திரங்களைஏற்றிக்கொண்டு வந்திருக்கின்றது.
 

 
52 டிகிரி வரை சரிந்து நிற்கும் அந்த கப்பலை நிமிரச் செய்ய பல நாட்களாகும் என கப்பல் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். கப்பல் கவிழ்ந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. கப்பலில் இருந்த 25 பணியாளர்களையும் கடற்படை வீரர்கள் பத்திரமாக  மீட்டனர்.
 
கப்பலில் 500 டன்கள் எடையுள்ள எரிபொருளும் இருந்ததாக கேப்டன் ஜான் நோபல் தெரிவித்தார். மேலும் தரைதட்டியதால் கப்பல் கடுமையாக சேதமடைந்திருக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
இந்த கப்பலில் இருந்த பொருட்களின் மதிப்பு 60 மில்லியன் பவுண்டுகள் இருக்கும் என தெரிகிறது. அவற்றில் பெரும்பாலானவை மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil