Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வயது சிறுமியை பாலியல் அடிமையாக்கிய பெற்றோர்: அதிர வைக்கும் காரணம்...

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (15:30 IST)
ரஷ்யாவில் தனது சொந்த மகளை பெற்றோர்கள் பாலியல் அடிமையாக நடத்தி வந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
12 வயதான சிறுமியை கடந்த ஒரு வருடமாக அவளது பெற்றோர்கள் பாலியல் அடிமையாக வைத்து துன்புறுத்தி வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவளது பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
மாதவிடாய் கோளாறு காணமாக மருவத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட குறித்த சிறுமியை, மருத்துவர்கள் பரிசோதித்த போது அந்த சிறுமி கன்னித்தன்மையை இழந்து இருந்தது தெரியவந்துள்ளது. 
 
இதனையடுத்து மருத்துவர்கள் சிறுமியிடன் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அந்த சிறுமி கடந்த இரு வருட காலமாக எனது பெற்றோர் என்னை பாலியல் அடிமையாக வைத்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார். இது குறித்து மருத்துவமனை தரப்பு போலீஸில் புகார் அளித்துள்ளது. அப்போது போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில், சிறுமியின் தந்தை மட்டுமின்றி தாயும் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்தது தெரியவந்துள்ளது. 
 
இதையடுத்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அந்த சிறுமியின் பெற்றோர்கள் கூறியதாவது, எனது மகளுக்கு பாலியல் உறவுகளைப் பற்றியும், பாலியல் கல்வி பற்றியும் தெரிந்துக்கொள்வதற்காகவே இப்படி செய்தோம் என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்த குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில், பெற்றோருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என தெரிகிறது. மேலும், அந்த சிறுமி குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

அடுத்த கட்டுரையில்