Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வயது சிறுமி கர்ப்பம்: 40 வயது கணவன் கைது!

12 வயது சிறுமி கர்ப்பம்: 40 வயது கணவன் கைது!

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (16:01 IST)
சீனாவில் 40 வயதான நபர் ஒருவர் 12 வயது சிறுமியை திருமணம் செய்து அவரை கர்ப்பமாக்கியுள்ளார். இதனையடுத்து பரிசோதனைக்கு சென்றபோது வசமாக சிக்க போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.


 
 
40 வயதான அவர் தனது தாயுடன் தனது 12 வயது மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதால் மருத்துவமனைக்கு அவரை பரிசோதனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மனைவிக்கு 12 வயது என சொன்னால் பிரச்சனையாகும் என்பதால் 20 வயது என பொய்யான தகவலை கூறியுள்ளார்.
 
ஆனால் மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு 20 வயதில்லை. சிறுமி தான் என்பதை பார்த்தவுடன் கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துவிட்டு. சிறுமியிடம் வயது குறித்து விசாரித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த 40 கணவர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அந்த சிறுமியும் தந்து வயது குறித்தான உண்மையை சொல்லவில்லை.
 
இந்நிலையில் காவல்துறை மருத்துவமனைக்கு வந்ததும் உரிய முறையில் விசாரித்து சிறுமியிடம் இருந்து உண்மையை தெரிந்து கொண்டனர். சிறுமி மைனர் என்பதால் அவர் குறித்தான தகவல் ரகசியமாக உள்ளது. 12 வயது சிறுமியை 40 வயது நபர் திருமணம் செய்து கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக அவரை கைது செய்துள்ளனர்.
 
அந்த சிறுமியிடம் சீன அடையாள அட்டை இல்லாததால் அவர் கடத்திக்கொண்டு வந்திருக்கலாம் அல்லது வெளிநாட்டில் இருந்து பெண் எடுத்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

கேதார்நாத் கோவில் நடை திறப்பது எப்போது? முன்பதிவு தேதி அறிவிப்பு..!

பழங்கள் மற்றும் உணவு கழிவுகளில் கான்கிரீட்.. ஐஐடி மாணவர்களின் கண்டுபிடிப்பு.!

ஜேஇஇ 2-ம் கட்ட தேர்வு: விண்ணப்பங்களை திருத்தம் செய்வது எப்போது?

முதலில் சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்திற்கு அனைத்து கட்சியை கூட்டுங்கள்: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments