Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷாரிய நீதிமன்றத்தில் நீதிபதியாக பெண் நியமனம்

ஷாரிய நீதிமன்றத்தில் நீதிபதியாக பெண் நியமனம்
, செவ்வாய், 31 டிசம்பர் 2013 (11:26 IST)
கராச்சியில் ஷாரிய நீதிமன்றத்தில் 33 ஆண்டுகளில் முதல் முறையாக பெண் நீதிபதி ஒருவர் பதவி ஏற்றுள்ளார்.
FILE

தெற்கு சிந்தில் உள்ள உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாகப் பணி புரிந்துவந்த அஷ்ரப் ஜெஹான் என்னும் 56 வயது பெண்மணி, கராச்சியில் உள்ள ஷாரிய நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாகப் பொறுப்பேற்றார்.

கடந்த 33 வருடங்களில் இஸ்லாமிய நீதிமன்றத்திற்கு ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.

பத்திரிகையாளர்களிடம் அரிதாகவே பேசும் ஷாரியத் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஆகா ரபிக் அஹமது இத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்விற்காக தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார்.

திறமையான பெண்ணான அஷ்ரப் இஸ்லாமிய நீதிமன்றத்தில் இணைந்துள்ளார். ஆண், பெண் என்ற பிரிவினை சட்டத்தில் இல்லை. அதனால் ஒரு பெண் நீதிபதி இங்கு செயல்படுவதற்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தான் இதற்கான முதல் முயற்சியை எடுத்து உலகம் முழுமைக்கும் தங்களது முற்போக்கான எண்ணத்தை வெளிப்படுத்தி உள்ளதாகவும், தங்கள் நாட்டினரைப் பற்றிய பல தவறான கருத்துகள் இந்த நடவடிக்கை மூலம் மாறக்கூடும் என்றும் அவர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil