Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெடிகுண்டு தாக்குதல்: தேடப்பட்டு வந்த மதகுரு உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 26 ஏப்ரல் 2019 (10:44 IST)
இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் தொடர்ப்பு உள்ளதக கருதப்பட்டு தேடப்பட்டு வந்த மதகுரு உயிரிழந்தார் என இலங்கை அரசு சற்று முன் அறிவித்துள்ளது. 
 
இலங்கையில் கடந்த ஞாயிறு அன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின் போது வெவ்வேறு பகுதிகளில் மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதலுக்கு இதுவரை 359 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். மேலும் 500 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   
 
தேசிய தவ்ஹீத் ஜமா அத் அமைப்புதான் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. ஹஸிம் இளைஞர்களை மனித வெடிகுண்டாக மாற்ற மூளைச்சலவை செய்து பலரை அவர் வசம் வைத்துள்ளார் போன்ர தகவல்கள் வெளியானது. இதனால், அவர் தேடப்பட்டு வந்தார். 
 
இந்நிலையில் இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் என இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன சற்றுமுன் தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், இலங்கை தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தார் ஜக்ரன் ஹஸிம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments