Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் 24,000 படையினர் பலி

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் 24,000 படையினர் பலி
கொழும்பு , வெள்ளி, 22 மே 2009 (17:13 IST)
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்க ராணுவம் 24 ஆயிரம் படை வீரர்களை இழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபகச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், விடுதலைப் புலிகளை முற்றிலுமாக ஒழிப்பதற்காக சிறிலங்க ராணுவம் கடுமையான இழப்பை சந்தித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வரும் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்க ராணுவத் தரப்பில் 23,790 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த 2006 ஆகஸ்டிற்கு பின்னர் துவங்கிய யுத்தத்தில் மட்டும் சிறிலங்காவின் ராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறையைச் சேர்ந்த 6,261 பேர் உயிரிழந்துள்ளனர்; 29,551 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.

எனினும் சிறிலங்க ராணுவத்திற்கு எதிரான போரில் எத்தனை விடுதலைப்புலிகள் உயிரிழந்தனர் என்ற விவரத்தை கோத்தபய ராஜபகச வெளியிடவில்லை. படையினருக்கு எதிரான போரில் 22 ஆயிரம் புலிகள் உயிரிழந்ததாக விடுதலைப்புலிகள் தரப்பில் கடந்தாண்டு தெரிவிக்கப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil