Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'லேண்டிங் கியர்' செயலிழந்த மலேசிய விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது

'லேண்டிங் கியர்' செயலிழந்த மலேசிய விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது

Suresh

, திங்கள், 21 ஏப்ரல் 2014 (12:39 IST)
கோலாலம்பூரிவிருந்து  பெங்களூருக்கு புறப்பட்ட மலேசிய விமானத்தின் 'லேண்டிங் கியர்' செயலிழந்ததால், வானத்தில் வட்டமடித்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
போயிங் 737-800 ரகத்தை சேர்ந்த மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான MH192 என்ற விமானம், மலேசிய தலைநகர் கோலாலம்பூரிவிருந்து இந்தியாவின் பெங்களூருக்கு 166 பயணிகளுடன் கிளம்பியது. கிளம்பிய சிறிது நேரத்திலேயே விமானத்தின் இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் கோலாலம்பூர் விமான நிலையத்தை சிலமணி நேரம் சுற்றி வந்தது.
 
அதன் வலதுபக்க 'லேண்டிங் கியர்' திடீரென செயலிழந்ததால் வானத்திலேயே மட்டமடித்தது. இந்நிலையில், இதை கவனித்த விமானப் போக்குவரத்து அதிகாரிகள் அந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். 
 
பாதுகாப்பு கருதி, அங்கு பாதுகாப்பு பிரிவினர் மற்றும் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அந்த விமானம் எவ்வித பாதிப்புமின்றி பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
 
சமீபத்தில் MH370 என்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 239 பயணிகளுடன் மாயமான நிலையில், மலேசிய விமானங்களில் இதுபோன்று இயந்திர கோளாறு ஏற்படுவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil