Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜபக்ச ஆட்சியில் இருக்கும் வரை இலங்கைக்கு புத்தாண்டே கிடையாது: பொன்சேகா

Webdunia
சனி, 1 ஜனவரி 2011 (17:54 IST)
அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசு பதவியில் இருக்கும் வரை இலங்கைக்கு புத்தாண்டே கிடையாது என்று ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சிறையிலிருந்தபடியே விடுத்திருக்கும் புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அவர், பயங்கரவாதத்திலிருந்து விடுபட்ட இலங்கை, தற்போது அரச பயங்கரவாதத்தின் அடக்குமுறைக்கு உட்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

பாதாளத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கும் நாட்டின் இன்றைய பயணத்தை தடுத்து நிறுத்துவதற்காகப் பாடுபடும் அனைவருக்கும் தன்னைப் போல் சிறைவாசம் தான் கிட்டும் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

ஆயினும் அழகானதொரு நாட்டை, நல்லிணக்கம் கொண்ட சமூகமொன்றை கட்டியெழுப்புவதாயின் அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்த்துப் போராட வேண்டிய கட்டாயத்தை நாட்டு மக்கள் அனைவரும் எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments