Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மோடியின் சிந்தனைகள் அற்புதமானது- அமெரிக்க MP புகழாரம்

மோடியின் சிந்தனைகள் அற்புதமானது- அமெரிக்க MP புகழாரம்
, வெள்ளி, 15 பிப்ரவரி 2013 (11:38 IST)
FILE
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் கூட்டத்தில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் சிறப்பான நிர்வாக திறமை மற்றும் ஆட்சி முறை குறித்து அவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது.

அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் பேலியோமாவேகா பேசினார். அவர் பேசிய போது, இந்தியாவில் உள்ள குஜராத் மாநில முதலமைச்சர் மோடியை புகழ்ந்து பேசினார்.

அவர் கூறியதாவது, நரேந்திர மோடியின் சிறப்பான நிர்வாகத்தால், குஜராத் மாநிலம் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வலிமையின் மையமாக திகழ்கிறது. உலக மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த நிறைய வேலைவாய்ப்புகளை மோடி உருவாக்கி உலக பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு எடுத்து செல்கிறார்.

அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களான போர்டு மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் தங்களது கம்பெனிகளை குஜராத்தில் நிறுவி வருகின்றன. எனவே அமெரிக்கா, நரேந்திர மோடியின் சிறந்த யோசனைகளை வெளிப்படையகாவும், முழுமையாகவும் அங்கீகரித்து அவருக்கு ஆதரவு வழங்கும் என்று நான் நம்புகிறேன் என அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil