Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மைக்கேல் ஜாக்சனின் செயற்கை மூக்கு மாயம்

மைக்கேல் ஜாக்சனின் செயற்கை மூக்கு மாயம்
நியூயார்க் , ஞாயிறு, 26 ஜூலை 2009 (16:27 IST)
பாப் இசை உலகின் சக்கரவர்த்தி மைக்கேல் ஜான்சனின் செயற்கை மூக்கு உட்பட உடலின் பல செயற்கை உறுப்புகள் மாயமானதாக அவரது வீட்டுப் பணியாளர் கூறியுள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மைக்கேல் ஜாக்சனின் திடீர் மரணம் அவரது குடும்பத்தினரை மட்டுமின்றி, உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் மாரடைப்பால் உயிரிழக்கவில்லை; கொலை செய்யப்பட்டுள்ளார் என மைக்கேல் ஜாக்சனின் சகோதரி பரபரப்புக் குற்றச்சாற்றை கூறினார்.

தற்போது புதிதாக ஒரு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜாக்சன் மரணம் அடைந்த பிறகு அவரது முகத்தில் மூக்கு இல்லை. அதற்கு பதிலாக 2 துவாரங்கள் மட்டுமே இருந்தன என்ற செய்தி வெளியாகியுள்ளது.

பாப் உலகில் பிரபலம் அடையத் தொடங்கியதும் மைக்கேல் ஜாக்சன் தனது உருவத்தை மாற்றி கொள்ள முகமாற்று அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) செய்து கொண்டார்.
இதுபோன்று 6 தடவை அறுசை சிகிச்சை செய்து தனது முகஅமைப்பை மாற்றினார்.

தனது மூக்கு தந்தையின் மூக்கை போன்று மிக பெரியதாக இருப்பதாக அவர் கருதினார். அதற்காக மூக்கை மிகவும் சிறியதாக மாற்ற அறுவை சிகிச்சை செய்தார். பெரியளவில் இருந்த மூக்கை நீக்கி விட்டு அதற்கு பதிலாக சிறியளவில் செயற்கை மூக்கை பொருத்தினார். இதன் மூலம் அவரது முகத்தின் அமைப்பு வித்தியாசமாக மாறியது.

ஆனால் இறந்த பிறகு அவரது உடலில் இருந்த செயற்கை மூக்கை காணவில்லை. அந்த இடத்தில் 2 துவாரங்களே இருந்தன. இந்த தகவலை மைக்கேல் ஜாக்சனின் வீட்டு வேலைக்காரன் அட்ரீயான் மக்மனல் தெரிவித்துள்ளார். மூக்கை போல அவரது உடலில் பொருத்திய செயற்கை உறுப்புகளும் மாயமானதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil