Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முகத்தை மாற்றியதால் மனைவியை மாற்றிய கணவர்

முகத்தை மாற்றியதால் மனைவியை மாற்றிய கணவர்
, வெள்ளி, 31 ஜனவரி 2014 (18:26 IST)
FILE
சவுதி அரேபியாவில், தனது கணவருக்குப் பிடித்த ஹாலிவுட் நடிகையைப் போன்று தனது முகத்தை மாற்றிக் கொண்ட மனைவியை கணவர் உடனடியாக விவாகரத்து செய்துள்ளார். இந்த செய்தி அந்நாட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவர், ஹாலிவுட் நடிகை கிம் கர்தாஷியான் மீது வெறித்தனமான ரசிகராக இருந்தார். நடிகை மீது வெறியாக இருந்த கணவரின் கவனத்தை தன் மீது திருப்ப நினைத்தார் அவரது மனைவி. நடிகை போலவே, சிகை அலங்காரத்தை மாற்றிக் கொண்டு, முகத்தையும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டார் மனைவி.

இதனால், கணவர் தன் மீது அன்பு செலுத்துவார் என்று நினைத்தார் மனைவி, ஆனால், மனைவியின் மாற்றத்தை வெறுத்த கணவர், அவளை விவகாரத்து செய்துவிட்டு உடனடியாக வேறொரு திருமணம் செய்து கொண்டிருப்பது அவளை பேரதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.

இது தான் உள்ளதும் போச்சுடா என்பதா?

Share this Story:

Follow Webdunia tamil