Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீனவர்கள் பிரச்னை தீர அப்துல் கலாம் புது யோசனை

மீனவர்கள் பிரச்னை தீர அப்துல் கலாம் புது யோசனை
கொழும்பு , செவ்வாய், 24 ஜனவரி 2012 (15:38 IST)
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் பிரச்னையை தீர்க்க முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளார்.

நான்கு நாள் பயணமாக இலங்கை வந்துள்ள கலாம், இன்று இலங்கை அதிபர் ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்.

அப்போது இலங்கை தமிழர் பிரச்னை, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்த பிரச்னை உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்து கலாம் விவாதித்தார்.

அப்போது, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுக்க கலாம் சில யோசனைகளை தெரிவித்தார்.

வாரத்தின் ஏழு நாட்களில் மூன்று நாட்கள் இலங்கை மீனவர்களும்,மற்றொரு மூன்று நாட்கள் தமிழக மீனவர்களும் மீன் பிடித்துக் கொள்ள வேண்டும்.ஒரு நாள் இரு தரப்பினருமே மீன் பிடிக்க செல்லாமல் ஓய்வுக்கு ஒதுக்கிவிடவேண்டும்.

அதே சமயம் மீன் பிடிக்க செல்லும்போது இரு தரப்பு மீனவர்களுமே மீன்வளம் இருக்கும் இடத்திற்கு செல்ல எல்லையை தாண்டி செல்லாம்.

ஐரோப்பாவில் உள்ள ஒரு சிறிய நாட்டில் மீனவர் ஒருவரின் தனி நபர் ஆண்டு வருவாய் 40,000 அமெரிக்க டாலர் ஆக உள்ளது.ஏனெனில் அவர்கள் ஆழ் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கின்றனர்.

அதே சமயம் இலங்கை மீனவர்களின் தனி நபர் ஆண்டு வருமானம் 3000 டாலர்களாகவும், இந்திய மீனவர்களின் ஆண்டு வருமானம் 2000 டாலராகவும் உள்ளது.

எனவே இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் ஆழ் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால், அவர்களது வருமானமும் அதிகரிக்கும் என்று கலாம் யோசனை தெரிவித்தார்.

ஆனால் கலாமின் இந்த யோசனையின் சாதக, பாதகங்கள் மீனவர்களுக்குதான் தெரியும்.அத்துடன் இந்த யோசனையை இந்தியா தரப்பில் ஏற்றுக்கொண்டாலும், இலங்கை ஏற்றுக்கொள்ளுமா என்பது சந்தேகம்தான்!

Share this Story:

Follow Webdunia tamil