Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாயமான விமானம் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என ஐ.நா கண்காணிப்பு மையம் தகவல்

மாயமான விமானம் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என ஐ.நா கண்காணிப்பு மையம் தகவல்
, செவ்வாய், 18 மார்ச் 2014 (12:56 IST)
கோலாலம்பூரிலிருந்து கடந்த 8 ஆம் தேதி பீஜிங்கிற்கு புறப்பட்ட பயணிகள் விமானம் 239 பயணிகளோடு மாயமானது. தற்போது வரை இந்த விமானம் தொடர்பாக தெளிவான தகவல்கள் பெறப்படாத நிலையில் இந்த விமானம் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்பில்லை என ஐ.நா கண்காணிப்பு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.
FILE

239 பயணிகளுடன் மாயமான MH 370 விமானத்தை 20 க்கும் மேற்பட்ட நாடுகள், 40 க்கும் மேற்பட்ட கப்பல்கள் மற்றும் விமானங்கள் முழுமூச்சாக தேடிவந்தன. நடுவானில் இந்த விமானம் மாயமாகி 10 நாட்கள் ஆகியுள்ள நலையில் விமானத்திற்கும், அதிலிருந்த பயணிகளுக்கும் என்ன ஆனது என்பது குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை.

இந்நிலையில், இந்த விமானம் வேண்டுமென்றே திசை திருப்பபட்டதாகவும், இந்த விமானம் மாயமானதில், அதீத தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், விமானம் ரேடார் கண்காணிப்பை தவிர்க்க தாழ்வாக பறந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

தற்போது, இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக மாயமான விமானம் விபத்தில் சிக்கியிருக்க வாய்ப்பு இல்லை என்று ஐ.நா.வின் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐ.நாவின் ஆதரவோடு இயங்கும் CTBTO கண்காணிப்பு அமைப்பு மாயமான விமானம் மோதியோ அல்லது வானில் வெடித்து சிதறியோ விபத்துக்குள்ளாகி இருக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது.
webdunia
FILE

இது தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானி டுஜாரிக் தெரிவிக்கையில், CTBTO கண்காணிப்பு அமைப்பு பின்பற்றும் சில செயல்முறைகளை கொண்டு விமான விபத்துகளை கண்டறிய முடியும், கண்காணிப்பு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி விமான விபத்துக்களை மூன்று, நான்கு வழிகளில் உறுதி செய்ய இயலும்.

அதன்படி, விமானம் எதிலாவது மோதியிருந்தாலோ, விபத்தில் சிக்கி வெடித்து சிதறியிருந்தாலோ அது குறித்த தகவல்கள் கிடைத்திருக்கும். எனவே கண்காணிப்பு மையத்தின் தகவலின் அடிப்படையில் விமானம் விபத்துக்குள்ளாகி இருக்க வாய்ப்பில்லை என்று ஸ்டெபானி தெரிவித்துள்ளார்.
webdunia
FILE

மாயமான விமானம் குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரணை மேற்கொண்டுள்ள புலனாய்வு துறையினர், விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் விமான குழுவினரின் வீடுகளில் சோதனை செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக விமானத்தின் விமானி குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil