Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலேசிய விமான விபத்தில் 239 பேர்பலியான பயங்கரம்! போலி பாஸ்போர்ட்டில் 2 பேர் பயணம் செய்தது அம்பலம்!

மலேசிய விமான விபத்தில் 239 பேர்பலியான பயங்கரம்! போலி பாஸ்போர்ட்டில் 2 பேர் பயணம் செய்தது அம்பலம்!
, திங்கள், 10 மார்ச் 2014 (10:57 IST)
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற விமானம் பயங்கர விபத்துக்குள்ளானது. அந்த விமானம் 9ஆம் தேதி அதிகாலை தெற்கு சீனக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது.
FILE

கட்டுப்பாட்டு அறையின் தொடர்பையும் இழ்ந்தது. இந்த நிலையில் வியநாஅம் அருகே கடலில் விழுந்து மூழ்கியது அந்த விமானம். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தில் 239 பேர் பலியாகினர்.

விமானத்தையும், அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணியில் வியட்நாம் கப்பல்கள் முழு வீச்சுடன் ஈடுபட்டுள்ளன. அத்துடன் மலேசியா மற்றும் அதன் அண்டை நாடுகளின் 22 விமானங்கள், 40 கப்பல்களும் இந்தப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சீனாவும், அமெரிக்காவும் கூட மீட்பு பணிகளுக்காக கப்பல்களை அனுப்பி உள்ளன.

தேடுதல் வேட்டை பரப்பளவும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் மேற்கு கடலோரப்பகுதி மட்டுமின்றி, விட்நாம் பகுதிகளிலும் இந்த பணி நடந்து வருகிறது. ஆனாலும் இதுவரை பலன் எதுவும் கிடைக்கவில்லை.
webdunia
FILE

வியட்நாமுக்கு தெற்கே கடல் பரப்பில் இரண்டு எண்ணெய் படலங்களை வியட்நாம் விமானப்படை விமானங்கள் கண்டுபிடித்துள்ளன. அவை மாயமான விமானத்தில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று யூகிக்கப்படுகிறது.

இதற்கிடையே ரேடார் திரையில் இருந்து மறைவதற்கு முன்பாக காணாமல் போன விமானம், பீஜிங் செல்வதற்கான திட்டமிட்ட பாதையிலிருந்து விலகி, மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்பியதற்கான சுவடுகள் ரேடாரில் பதிவாகி இருப்பதாவும் இப்போது தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடக்கிறது.

இந்த நிலையில் மலேசிய விமானம் விபத்துக்குள்ளானதில் நாசவேலை நடந்திருக்கவும் வாய்ப்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மலேசிய விமானத்தில் பயணம் செய்த பயணிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள 4 பேர் தீவிரவாதிகளாக இருந்திருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தகவலை மலேசிய ராணுவ மந்திரியும், போக்குவரத்துதுறை (பொறுப்பு) மந்திரியுமான சாமுதீன் உசேன் தெரிவித்தார்.
webdunia
FILE

விமான பயணிகள் பட்டியலில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரியாவை சேர்ந்த கிறிஸ்டியன் கோசல், இத்தாலியர் லுய்கி மரால்டி ஆகிய இருவரும் விமானத்தில் பயணம் செய்யவில்லை என்பதை அந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அலுவலகங்கள் உறுதி செய்துள்ளன. தாய்லாந்தில் வைத்து அவர்களது பாஸ்போர்ட்டுகள் திருடப்பட்டுள்ளன.

அவர்கள் இருவரும் விமானத்தில் பயணம் செய்யவில்லை என்கிற போது, அவர்களது பாஸ்போர்ட்டில் பயணம் செய்த 2 பேர் யார், யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் டிக்கெட் ஒன்றாக வாங்கப்பட்டுள்ளது என்ற தகவல் அவர்கள் மீதான சந்தேகப்பார்வையை வலுவடைய செய்துள்ளது. தீவிரவாதிகள் என்ற சந்தேகத்துக்கு உள்ளான மற்ற இருவர் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. அவர்களும் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இருப்பினும் தொடர்புடைய நாடுகளின் தீவிரவாத தடுப்பு போலீஸ் படைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளதாக மலேசிய மந்திரி சாமுதீன் உசேன் கூறினார். மேலும் விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகளின் பின்னணியும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாயமாகி விபத்துக்குள்ளான விமானம் புறப்பட்டு சென்ற நேரத்தில், கோலாலம்பூர் விமான நிலையத்தில் ரகசிய கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

உறுதியான எந்தத் தகவல்களும் தெரியாமல் உறவினர்கள் அதிர்ச்சியுடன் சீனாவிலும் மலேசியாவிலும் காத்திருக்கின்றனர்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil