Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனித தோலில் இருந்து ஸ்டெம் செல்கள் - விஞ்ஞானிகள் சாதனை

மனித தோலில் இருந்து ஸ்டெம் செல்கள் - விஞ்ஞானிகள் சாதனை
, திங்கள், 10 பிப்ரவரி 2014 (15:56 IST)
மனிதனின் தோலில் உள்ள அணுக்களில் இருந்து மருத்துவ குணங்கள் உடைய ஸ்டெம் செல்களை உருவாக்கி அமெரிக்க- ஜப்பானிய மருத்துவ விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
FILE

பிறந்த குழந்தையின் குருத்தணுக்களை சேமித்து வைப்பதன் மூலம் பின்நாட்களில் அந்த குழந்தை முதுமை அடையும்போது ஏற்படும் கொடிய நோயின் தாக்கத்தை எதிர்த்து போராட முடியும் என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், செயற்கை முறையில் குருத்தணுக்களை உருவாக்கும் ஆராய்ச்சியில் மாசாச்சூசெட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகத்தின் முன்னேறிய குருத்தணு ஆராய்ச்சி கூடத்தில் பணியாற்றும் அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த டாக்டர்கள் கூட்டாக ஈடுபட்டிருந்தனர்.

இதற்காக பரிசோதனை கூடத்தில் வளர்க்கப்படும் எலிகளின் மேல்தோலில் உள்ள உயிரணுக்களை எடுத்து வீரியம் குறைந்த சிட்ரிக் அமிலக் கலவையில் சுமார் அரை மணி நேரம் வைத்தபோது அமிலத்தில் ஊறிய அந்த உயிரணுக்களில் இருந்து புதிய எம்ப்ரியோ உருவானது.
webdunia
FILE

இந்த எம்ப்ரியோவை வைத்து குருத்தணுவை உருவாக்கும் சோதனை முயற்சியும் வெற்றி பெற்றதால், இதே முறையில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மனித தோலையும் சோதித்து பார்த்தபோது அதேபோன்ற மாற்றம் ஏற்பட்டது.

இப்படி செயற்கை முறையில் உருவாக்கி உயிரூட்டப்படும் குருத்தணுக்களை கொண்டு பார்கின்சன் நோயிலிருந்து இதய நோய் வரை பல பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil