Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணமக்களான மைக்கேல் ஜாக்சன் குழந்தைகள் !

Webdunia
புதன், 15 ஜூலை 2009 (21:09 IST)
மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், தனது குழந்தைகள் இருவரையுமே மணக்கோலத்தில் நிறுத்தி 'விளையாட்டு திருமணம்' செய்து வைத்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

படிப்பதற்கு அபத்தமாக தோன்றினாலும் , ஜாக்சனின் மகன் பிரின்ஸ் மைக்கேல் மணமகனாகவும் , மகள் பாரிஸ் மணமகளாகவும் திருமண கோலத்தில் நிற்கும் புகைப்படங்களை, ஜாக்சனின் குடும்ப ஆல்பத்திலிருந்து கிடைத்ததாக கூறி லண்டனிலிருந்து வெளியாகும் 'டெய்லி ஸ்டார்' பத்திரிகை வெளியிட்டுள்ளது.

மற்றொரு பத்திரிகையான "ஓகே" ( OK ) பிரின்ஸ் மற்றும் மைக்கேல் ஆகிய இருவரும் புதிதாக திருமணமான தம்பதிகளைப் போன்று ஒருவரோடு ஒருவர் கைகோர்த்து நிற்பது மற்றும் உதட்டோடு முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை வெளியிடப்பட்டுள்ளது.

ஜாக்சன் நடத்திய வேடிக்கையான, விநோதமான திருமணம் இது என்று வர்ணித்துள்ள அப்பத்திரிகை , அதே சமயம் ஜாக்சன் தமது குழந்தைகள், பிரபல புகழ்பெற்ற மற்றும் பணக்கார குழந்தைகள் போன்றல்லாமல் மற்ற குழந்தைகள் போன்றே சாதாரணமாக வளர்க்கப்படுவதையே விரும்பியதாக ஜாக்சனின் நெருங்கிய நண்பர்கள் கூறியதாகவும் தெரிவித்துள்ளது.

இதே கருத்தை தெரிவித்துள்ள ஜாக்சனின் பழைய நண்பரும் , பிரபல பிரிட்டன் நடிகருமான மார்க் லெஸ்டர், "தமது குழந்தைகள் மற்றக் குழந்தைகள் போன்று சாதாரணமாக வளர்வதை விரும்பிய ஜாக்சன், அவர்கள் தங்களுக்கிடையே ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்வதையும், வாக்குவாதம் செய்வதையும், அவ்வப்போது குறும்பு செய்வதையும் ஊக்குவித்து ரசித்தார் என்றும் கூறியுள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!