Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் அச்சத்திலிருந்து நாம் விடுபட வேண்டு்ம்: கிலானி

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2011 (16:52 IST)
இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இடையே போர் ஏற்படும் என்ற தேவையற்ற அச்சத்திலிருந்து இரு நாடுகளும் முதலில் விடுபட வேண்டும் என்றும், இரு நாடுகளிலும் நிலவும் ஏழ்மையைப் போக்குவது குறித்து கவனம் செலுத்திட வேண்டு்ம் என்றும் பாகிஸ்தான் பிரதமர் யூசுஃப் ராசா கிலானி கூறியுள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியைக் காண இந்தியப் பிரதமர் விடுத்த அழைப்பை ஏற்று மொஹாலி சென்றிருந்தபோது, பிரதமர் மன்மோகன் சிங்குடன் தான் நடத்திய பேச்சுவார்த்தையின் விவரத்தை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கிலானி விளக்கினார்.

“போரைப் பற்றிய அச்சம் நீங்கினால்தான் நம் நாடுகளில் உள்ள ஏழை எளிய மக்களின் வாழ் நிலை மீது நாம் கவனம் செலுத்த முடியும். இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இரு நாடுகளும் ஒன்றிணைந்தே செயல்பட வேண்டும். நம்மிடையிலான பிரச்சனையைத் தீர்க்க 3வது நாடு ஒன்று தலையிட்டுத் தீர்க்க முடியாத ு” என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தான் தெரிவித்ததாக கிலானி கூறியுள்ளார்.

இரு நாடுகளிலும் நிலவும் ஏழ்மையே முக்கிய பிரச்சனை என்றேன். அதனை மன்மோகன் சிங் ஏற்றுக்கொண்டார் என்று கிலானி பேசியுள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments