Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேச்சுவார்த்தையில் பாக்.ராணுவம் பங்கேற்க முடியாது : இந்தியா

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2009 (19:32 IST)
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான ப ேச ்சுவார்த்தையில் பாகிஸ்தான் ராணுவத்தையோ அல்லது ஐஎஸ்ஐ உளவு அமைப்பையோ பங்கேற்க அனுமதிக்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது.

பாகிஸ்தானின் கொள்கையை உருவாக்குவதில் தங்களுக்கு முக்கிய பங்கு இருப்பதாலும், பாகிஸ்தானின் உண்மையான அதிகார மையங்களாக தாங்கள் திகழ்வதாலும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் தாங்களும் இடம்பெற விரும்புவதாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ யும் , ராணுவமும் கூறியதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ராணுவமோ அல்லது ஐஎஸ்ஐ யோ பங்கேற்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும், அவர்களை பேச்சுவார்த்தையில் பங்கேற்க அனுமதிக்க முடியாது என்றும் இந்திய அயலுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தானுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்குவது என்பது, பயங்கரவாதத்திற்கு எதிராக அந்நாடு மேற்கொள்ளும் நடவடிக்கையை பொருத்தே அமையும் என்றும்,அதுவும் விரிவான முறையில் அல்லாமல் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பேச்சுவார்த்தைக்கான சாத்தியம் மட்டுமே உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments