Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பூமியை போன்றே காட்சியளிக்கும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு

பூமியை போன்றே காட்சியளிக்கும் புதிய கிரகம் கண்டுபிடிப்பு
, வெள்ளி, 1 நவம்பர் 2013 (13:11 IST)
பூமியை போன்ற எடை மற்றும் அளவிலான ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் உள்ள பல்வேறு கிரகங்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. அந்த வகையில் பூமியை போன்ற எடை மற்றும் அளவிலான ஒரு புதிய கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
FILE

'கெப்லர்-78 பி' என பெயரிடப்பட்டுள்ள இந்த கிரகம் பூமியில் இருந்து 700 ஒளி ஆண்டு தூரத்தில் உள்ளது.

இந்த கிரகத்தில், பூமியை போன்று பாறைகள் மற்றும் இரும்பு தாது அதிக அளவில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. .
webdunia
FILE

பூமியை விட 1.2 மடங்கு பெரியதாக இருக்கும் இந்த கிரகம் 1.7 மடங்கு கூடுதல் எடை கொண்டதாக உள்ளது.

மேலும், இக்கிரகத்தில் பூமியை விட 2 ஆயிரம் டிகிரி செல்சியஸ் அதிக வெப்பம் உடையது. இதனால் அங்கு உயிர்கள் வாழ சாத்தியமில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil