Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான் அதிபர் சர்தாரி 6ஆ‌ம் தே‌தி சீனா பயண‌ம்

பாகிஸ்தான் அதிபர் சர்தாரி 6ஆ‌ம் தே‌தி சீனா பயண‌ம்
இஸ்லாமாபாத் , வியாழன், 1 ஜூலை 2010 (09:42 IST)
பாகிஸ்தான் அதிபர் சர்தாரி வரு‌ம் 6ஆ‌ம் தேதி சீனா செல்கிறார்.

11ஆ‌ம் தேதி வரை சுற்றுப்பயணம் மே‌ற்கொ‌ள்ளு‌ம் அவ‌ர், சீனா அதிபர் ஹியூ ஜிண்டாவோ, பிரதமர் வெண் ஜியாபாவோ, அரசியல் ஆலோசகர் ஜியா கிங்லின் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

அப்போது அணு சக்தி உலைகளை அமைப்பதற்கான விவகாரத்தில் இறுதி முடிவு எடுப்பற்காக சீனத்தலைவர்களை அவர் வற்புறுத்துவார் எ‌ன்று எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌கிறது.

சீனாவில் தனி நாடு கேட்டு போராடும் உய்க்குர் முஸ்லிம்களை ஒடுக்குவதற்கு அவர் சீனாவுக்கு உதவி செய்வார் என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாகிஸ்தானின் தீவிரவாத தலைவர்களான ஜமாத் இ இஸ்லாமிக்கு உதவிகளை செய்யவும் சீனா திட்டமிட்டு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil