Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தானிலும் நிலநடுக்கம்

பாகிஸ்தானிலும் நிலநடுக்கம்
கராச்சி , சனி, 12 மார்ச் 2011 (15:13 IST)
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ள நிலையில், பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு பீதியை ஏற்படுத்தியது.

ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய வடமேற்கு பாகிஸ்தான் பகுதியில் இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஆப்கானிஸ்தானின் ஹிந்து குஷ் மலைப்பகுதியை மையமாக வைத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானதாக கராச்சியில் உள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

கைபர், பெஷாவர் உள்ளிட்ட இடங்களிலும் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல் இல்லை

Share this Story:

Follow Webdunia tamil