Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானின் அணு ஆயுதக் குவியல் அதிகரிப்பு!

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (19:09 IST)
பாகிஸ்தானிடமுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 70 முதல் 90 ஆக உயர்ந்துள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.

அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பைச் ( Federation of American Scientist - FAS) சேர்ந்த ஹான்ஸ் எம் கிரிஷ்டன்சன் என்று அந்த விஞ்ஞானி, அணு விஞ்ஞானிகள் அமைப்பு வெளியிட்ட அணு சக்தி குறிப்பேடு ஒன்றை சுட்டிக்காட்டி இத்தகவலை வெளியிட்டுள்ளார். இதுவரை பாகிஸ்தானிடம் 60 அணு ஆயுதங்கள் வரை இருப்பதாகக் கூறப்பட்டது, அது தற்பொழுது 70 முதல் 90 ஆக அதிகரித்திருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் பல முறை சோதித்துள்ள ஷாஹீன் 2 அணு ஆயதங்களை தாங்கிச் செல்லும் வல்லமை கொண்ட ஏவுகணை விரைவில் அந்நாட்டு இராணுவத்தில் சேர்க்கப்படவுள்ளது என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானிடமுள்ள இடைத்தூர ஏவுகணைகளும், அது விரைவில் படையில் சேர்க்கவுள்ள இலக்கை நோக்கி செலுத்தவல்ல ஏவுகணைகளும் மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என்று அந்த விஞ்ஞானி கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்கள் குறித்து கடந்த சில நாட்களாக சர்வதேச ஊடகங்களில் பல செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை. ஏனெனில் ஷாஹீன் 2 ஏவுகணை அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று 2000 கி.மீ. தூரம் வரையுள்ள இலக்குகளை தாக்கவல்லது என்பது அது சோதிக்கப்பட்டபோதெல்லாம் வெளிவந்த செய்திகள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments