Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பங்காளதேஷில் வெள்ளத்திற்கு 6 பேர் பலி

Webdunia
சனி, 4 ஜூலை 2009 (17:00 IST)
பங்காளதேஷில் பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் 6 பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பங்காளதேஷ் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹபிகன்ஞ்ச் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கடுமையான மழை பெய்து வருகிறது.

இந்த மழையினால் இங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால் மேற்கூறிய மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வெள்ள நீர் புகுந்தது.

இதில் ஒரு குடிசை வீடு இடிந்து விழுந்த நிலையில், அதில் வசித்து வந்த 4 சிறுவர்கள் உள்ளிட்ட 6 பேர் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்ப்பட்டதாக உள்ளூர் காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய எல்லையையொட்டி அமைந்துள்ள கிழக்கு பங்காளதேஷ் பகுதியில் கடந்த சில தினங்களாகவே பெய்து வரும் பருவ மழை காரணமாக, அங்குள்ள முக்கிய ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுவிடுமாறு டாக்காவிலுள்ள வெள்ள எச்சரிக்கை மையம் அறிவுறுத்தியுள்ளது.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments