Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நேட்டோவுக்கு எதிரான என்னுடைய போராட்டம் காரணமாக அமெரிக்கா என் தலைக்கு குறி வைத்துள்ளது - சயீத்

நேட்டோவுக்கு எதிரான என்னுடைய போராட்டம் காரணமாக அமெரிக்கா என் தலைக்கு குறி வைத்துள்ளது - சயீத்
, செவ்வாய், 3 ஏப்ரல் 2012 (19:21 IST)
FILE
லஸ்கர் தீவிரவாத அமைப்பின் நிறுவனரும் ஜமாத் உத் தவா அமைப்பின் தலைவருமான ஹஃபீஸ் மொகமட் சயீத், அமெரிக்கா மீதும் அதன் நேட்டோ படைகள் மீதும் தான் தொடுத்த எதிர்ப்பே தன் தலைக்கு அமெரிக்கா விலை வைத்ததன் காரணம் என்று சாடியுள்ளார்.

"எங்கள் தலைக்கு விலை வைக்கும் அளவுக்கு நாங்கள் ஒன்றும் குகைகளில் தலைமறைவாக வாழ்ந்து விடவில்லை. நேட்டோ படைகளுக்கு வழங்கப்படும் சப்ளை மற்றும் ராக்கெட் தாக்குதலுக்கு எதிராக நாடு முழுதும் எதிர்ப்பு போராட்டம் நடத்தியதால் அமெரிக்கா என்மீது வெறுப்படைந்துள்ளது என்று கருதுகிறேன்" என்று அல் ஜசீரா அவர் கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

"ஒன்று அமெரிக்காவுக்கு என்னைப்பற்றி அறிவு கொஞ்சம் கூட இல்லாமல் இருக்கவேண்டும் அல்லது இந்தியா கொடுக்கும் தவறான தகவலின் அடிப்படையில் முடிவெடுத்திருக்கவேண்டும் அல்லது அவர்கள் மிகவும் வெறுப்படைந்திருக்கவேண்டும்" என்றார் சயீத்.

சயீதின் தலைக்கு ரூ.50 கோடி அமெரிக்கா பரிசு அளித்திருந்ததையடுத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார். மும்பை 26/11 பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் இவர் இருக்கிறார் என்பதால் அமெரிக்கா இதனை அறிவித்திருந்தது, இந்தியாவும் இதனை வரவேற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த நவம்பர் மாதம் நேட்டோ சப்ளைஸை தடுக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 24 பேர் பலியானதையடுத்து அமெரிக்கா இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருக்கலாம் என்கிறார் சயீத்.

சயீத் ஏற்கனவே வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்து பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பிணையில் வெளியில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

News Summary: “We are not hiding in caves for bounties to be set on finding us. I think the U.S. is frustrated, Says Saeed.

Share this Story:

Follow Webdunia tamil