Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீதிமன்ற தீர்ப்பினால் பதவி விலக மாட்டேன்: சர்தாரி

நீதிமன்ற தீர்ப்பினால் பதவி விலக மாட்டேன்: சர்தாரி
இஸ்லாமாபாத் , வியாழன், 17 டிசம்பர் 2009 (13:32 IST)
ஊழல் வழக்கில் தமக்கு பொது மன்னிப்பு வழங்கியது செல்லாது என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு காரணமாக தாம் பதவி விலகப் போவதில்லை என பாகிஸ்தான் அதிபர் ஆஸிப் அலி சர்தாரி தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பு காரணமாக தாம் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று சர்தாரி திட்டவட்டமாக கூறிவிட்டதாக அவரது பேச்சாளர் ஃபர்கத்துல்லா பாபர் தெரிவித்ததாக இஸ்லாமாபாத்திலிருந்து வெளியாகும் 'டான்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

" பாகிஸ்தான் மக்கள் கட்சியும், அதிபர் சர்தாரியும் நீதிமன்றத்தையும், அதன் தீர்ப்பையும் மதிக்கிறார்கள்.இந்த தீர்ப்பினால் ஏற்படும் எத்தகைய நிலையையும் சந்திக்க கட்சி தயாராக உள்ளது.

அரசியல் சாசனத்தின் 248 ஆவது பிரிவின் படி, அதிபருக்கு எதிராக எந்த ஒரு கிரிமினல் வழக்கும் தொடர முடியாது என்பதால் சர்தாரிக்கு அரசியல் சாசனம் முழு விலக்கு அளித்துள்ளது " என்று அந்த பேச்சாளர் மேலும் கூறியதாக அந்த ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த 2007 ஆம் ஆண்டு அதிபராக இருந்த முஷாரப் ஆட்சிக் காலத்தில், சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்குகளில் பொது மன்னிப்பு வழங்குவதற்கான ஒருமித்த அரசியல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட்டதற்கான தகுதியின் பின்னணி குறித்தும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை உச்ச நீதிமன்றத்தின் 17 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.

விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், “சர்தாரிக்கு வழங்கிய பொது மன்னிப்பு செல்லாது.பொது மன்னிப்பின் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்ட அவர் மீதான வழக்குகளில் மீண்டும் விசாரணை நடத்தப்படும்.

அரசு தரப்பில் இந்த வழக்குகளை நடத்தினால் காலதாமதம் ஏற்படும் எனக் கருதுவதால், சர்தாரி மீதான வழக்குகளை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மற்றும் நாட்டின் நான்கு மாகாண உயர் நீதிமன்றத்திலும் கண்காணிப்பு பிரிவு நிறுவப்படும் " என நீதிபதிகள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil