Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாகரீக உடை அணிந்தால் கல்லால் அடித்து கொலையா? ஈராக்கில் அராஜகம்!

நாகரீக உடை அணிந்தால் கல்லால் அடித்து கொலையா? ஈராக்கில் அராஜகம்!
, புதன், 14 மார்ச் 2012 (15:26 IST)
FILE
மேல்நாட்டுப் பாணி நாகரீக உடை அணிந்த 14 இளைஞர்களை ஈராக் தீவிரவாதிகள் கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க ராணுவம் அங்கு எந்த விதப் பிரச்சனைகளையும் தீர்க்காமல் ஓடிவிட்டது. ஷியா, சன்னி பிரிவினருக்கு இடையேயான வன்முறையில் மக்கள் கும்பல் கும்பலாக கொலை செய்யப்படுவதுதான் ஈராக்கில் மீதமாகியுள்ளது.

இந்த நிலையில் இஸ்லாமிய அடிப்படைவாதம் அங்கு தலை தூக்கியுள்ளது.

ஷியா பிரிவை சேர்ந்த தீவிரவாதிகள் பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். அதன்படி இளைஞர்கள் அமெரிக்கர்களின் ஸ்டைலில் நவ நாகரீக உடைகளை அணியக் கூடாது. இறுக்கமான ஜீன்ஸ் பேண்டுகள், டி.சர்ட்டுகளை அணியக்கூடாது. அதில் லோகோக்கள் இடம் பெறக்கூடாது.நீளமான தலைமுடியுடன் அலங்காரம் கூடாது.

பெண்கள் ஆடம்பரமாக இருக்கக் கூடாது. இவையெல்லாம் கீழ்த்தரமான செயல் என்று அறிவித்துள்ளனர். அதையும் மீறி செயல்படும் இளைஞர்கள் 14 பேர் கல் மற்றும் செங்கற்களால் அடித்து கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 9 பேர் சதார் நகரிலும், 3 பேர் கிழக்கு பாக்தாத்திலும் 2 பேர் மத்தியமார்க் பகுதியிலும் கொலை செய்யப்பட்டுள்னர்.

இவர்களின் உடல்கள் ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர மேலும் பலர் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெண்களும் அடங்குவர்.

நாகரீக உடையுடன் வலம் வரும் இளைஞர்கள் மற்றும் பெண்கள் முதலில் எச்சரிக்கப்படுகின்றனர். அதன் பிறகும் நாகரீக உடை அணிந்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஆங்காங்கே ஒட்டப்படுகிறது.

பின்னர் அவர்கள் தீவிரவாதிகளால் நடுரோட்டில் கல்லால் அடித்து கொலை செய்யப்படுகின்றனர். ஆனால் இதுவரை யார் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

News Summary:In the past three weeks 14 youths have been stoned to dead by Shiite militants in Iraqi for wearing Western-style Emo clothes and haircuts. Militants in Shiite neighborhoods where the stoning had taken place circulated lists on Saturday naming more youths targeted to be killed if they do not change the way they dress. Other sources put the Emo death toll much higher. Hana al-Bayaty of Brussels Tribunal, a nongovernmental organization dealing with Iraqi issues, said the current figure is ranging between 90 and 100.

Share this Story:

Follow Webdunia tamil