Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடைபாதையில் பிரசவம், இனி எப்போதும் இலவச பயணம்!

Webdunia
வியாழன், 2 மே 2013 (15:09 IST)
FILE
மெக்ஸிகோவில் உள்ள ரயில் நிலையத்தில் ஒரு குழந்தை பிறந்ததால், அக்குழந்தை வாழ்நாள் முழுவதும் ரயில்களில் இலவசமாக பயணம் செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மெக்ஸிகோ நாட்டில் 22 வயது நிரம்பிய இளம்பெண் ஒருவர், பிரசவத்திற்காக மருத்துவமனைக்கு செல்வதற்காக சுரங்க ரயில் நிலையத்திற்கு சென்றார்.

ரயிலில் ஏறுவதற்கு முன்னரே, அவருக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்பட, அங்கிருந்த ரயில் நிலைய ஊழியர்கள், காவல்துறையினர் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் ஆகியோரின் உதவியுடன் ரயில் நிலைய நடைபாதையிலேயே அப்பெண் பெற்றெடுத்தார்.

இதையடுத்து, அந்நகரத்தின் மேயர் மிக்யுல் ஏஞ்செல் மன்செரா தனது ட்விட்டர் பக்கத்தில்,அந்த குழந்தைக்கு வாழ்த்துத் தெரிவித்ததுடன், தன் வாழ்நாள் முழுவதும் அக்குழந்தை இலவசமாக சுரங்க ரயிலில் பயணம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments