Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடக்கவோ, நகரவோ முடியாத நிலையில் செல்ல குரங்குகள்: மனிதர்களால் ஏற்படும் அவலம்

நடக்கவோ, நகரவோ முடியாத நிலையில் செல்ல குரங்குகள்: மனிதர்களால் ஏற்படும் அவலம்
, ஞாயிறு, 5 ஜனவரி 2014 (16:13 IST)
இங்கிலாந்தில் வீடுகளில் செல்லமாக வளர்க்கப்படும் பெரும்பாலான குரங்குகள் உடற்பருமன் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
FILE

மனிதர்களை போன்று குரங்கும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்ற திடுக்கிடும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது அதிகரித்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் நாய், பூனை போல குரங்குகளை வீட்டில் வளர்ப்பவர்கள் அதற்கு கொழுப்பு சத்து நிறைந்த உணவை அளிப்பதுதான் குரங்கு நீரிழிவு நோய் மற்றும் உடற்பருமனால் பாதிக்கப்பட காரணமென தெரிகிறது.

வீட்டில் வளர்க்கப்படும் குரங்குகளுக்கு பீட்சா, சிப்ஸ், சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகள் போன்ற துரித உணவுகளை உரிமையாளர்கள் கொடுக்கின்றனர்.இதனை சாப்பிட்டு வளர்வதால் அவைகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டு நோய் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
webdunia
FILE

பிரிட்டனின் கோர்ண்வால் விலங்குகள் சரணாலயத்தில் இருக்கும் மூன்றில் ஒரு குரங்கு, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ''வைல்ட் ஃபியூச்சர்'' என்னும் தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும் யார்க்ஷயர் சரணாலயத்தை நடத்தி வரும் ஜோன் ஸ்மித் என்பவர் கூறுகையில், விலங்குகளால் நடக்கவோ, நகரவோ முடியாத அளவிற்கு உடற்பருமன் நோயினால் தாக்கப்பட்டு அதிக எடையுடன் இருப்பதற்கு காரணம் உரிமையாளர்கள் கொடுக்கும் கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளே என்று தெரிவித்துள்ளார்.

அவ்வாறு உடற்பருமனுடன் இருக்கும் குரங்குகளை அதன் உரிமையாளர்கள் சரணாலயங்களில் விட்டுவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil