Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர்ந்து தமிழின அழிப்பில் ஈடுபடும் இலங்கை அரசு - ஐ.நா.வில் வடக்கு மாகாண கவுன்சில் புகார்

Webdunia
செவ்வாய், 11 மார்ச் 2014 (13:23 IST)
ஜெனீவாவில் நடக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் மாநாட்டில் பேசிய இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இலங்கை அரசு மீது சுதந்திரமான விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
FILE

சர்வதேச நாடுகள் மற்றும் ஐ.நா-வின் நேரடி தலையீடு இன்றி ஈழத்தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காண இயலாது என அவர் கூறினார். போர் குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய 5 ஆண்டுகள் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இலங்கை அரசு தமிழர்களையும், சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றி வருவதாக குற்றம்சாற்றினார்.

இலங்கை அரசு மீது நம்பிக்கை இழந்துள்ள நிலையில் தமிழ் சமூகம் ஐ.நா.வின் உதவியை பெரிதும் நம்பி இருப்பதாகவும் அவர் கூறினார். நில அபகரிப்பு, சிங்களவர் குடியேற்றம், ராணுவ அத்துமீறல், மனித உரிமை மீறல் உள்ளிட்ட செயல்களில் ராஜபக்சே அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம்சாற்றினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments