Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவைப்பட்டால் பாக்.கில் மீண்டும் தாக்குதல் - ஒபாமா

Webdunia
ஞாயிறு, 22 மே 2011 (16:17 IST)
பயங்கரவாதத் தலைவர்கள் வேறு யாரேனும் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பது தெரியவந்தால், பின் லேடனை சுட்டுக் கொன்றதைப் போன்ற நடவடிக்கையை மேற்கொள்வோம் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

பிரிட்டனுக்குப் புறப்படுதற்கு முன் பிபிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளிட்ட ஒபாமா, பாகிஸ்தானின் இறையாண்மை மீது மரியாதை வைத்துள்ளோம். ஆனால், அமெரிக்க மக்களையோ, கூட்டணி நாட்டு மக்களையோ கொல்லும் பயங்கரவாதிகளை அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

அல் கய்டாவின் மற்ற தலைவர்களோ அல்லது தாலிபான் தலைவர் முல்லா ஒமரோ பாகிஸ்தானிலோ அல்லது பிற நாட்டிலோ இருப்பது தெரியவந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, தேவைப்பாட்டால் அமெரிக்கா தன்னிச்சையான நடவடிக்கையை மே‌ற்கொ‌ள்ளு‌ம ் என்று அதிபர் ஒபாமா கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

Show comments