Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேவயானி வழக்கில் மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2013 (11:39 IST)
நியூயார்க்கில் கைது செய்யப்பட்ட இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை தொடர்ந்து நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பாக மன்னிப்பு கேட்கும் பேச்சுகே இடமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
FILE

அமெரிக்காவுக்கான இந்திய துணை தூதர் தேவயானி கோப்ரகடே மீதான வழக்கை தொடர்ந்து நடத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

FILE
எக்காரணம் கொண்டும் மன்னிப்பு கேட்பது என்ற பேச்சுக்கே இடமில்லையென்றும், அவர் மீதான வழக்கை திரும்பப்பெறும் எண்ணமில்லை என்றும் அமெரிக்கா கூறிவருவதாக தெரிகிறது.

அவருக்கு எதிராக மேலும் சில ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டுக்களை பதிவு செய்வதற்கு கடைசி நாளான ஜனவரி 13 ஆம் தேதிக்குள் இந்த ஆதாரங்களை திரட்டவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

முன்னதாக டிசம்பர் 12 ஆம் இந்திய துணை தூதர் தேவயானி கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு இந்தியா முழுவதும் பலத்த எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் இந்தியாவும் இங்குள்ள அமெரிக்க அதிகாரிகளுக்கு எதிராக சில நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 4 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. ரெட் அலர்ட் எச்சரிக்கை..!

8 முறை வாக்களித்த இளைஞர் கைது.. தேர்தல் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

Show comments