Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி செல்ல வேண்டாம் -கற்பழிப்பு அச்சத்தில் பிரிட்டன் அரசு!

Webdunia
வியாழன், 3 ஜனவரி 2013 (13:20 IST)
FILE
டெல்லி மாணவிக்க ு நடந் த கொடூ ர கற்பழிப்ப ை அடுத்த ு பிரிட்டன ் அரசு, தன் நாட்டு மக்களை சுற்றுலாவுக்கா க டெல்ல ி செல் ல வேண்டாம ் என்று அறிவுறுத்தியுள்ளத ு.

டெல்லியில் மாணவ ி ஒருவர ் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், இந்தியாவை மட்டும் அல்லாமல் உலக அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டன் அரசு, சுற்றுலாவுக்காக டெல்லி செல்வதை பிரிட்டன் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும் இந்தியாவின் பல பகுதிகளில் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுவதையும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதையும் பிரிட்டன் அரசு சுட்டிகாட்டியுள்ளது.

டிசம்பரில் இந்தியாவின் வட மாநிலங்களில் நிலவும் குளிர், மேற்கத்திய நாட்டவருக்கு மிதமான காலநிலையாக கருதப்படுகின்றது. ஆகவே இந்த மாதத்தில் டெல்லியில் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். டெல்லியின் மையப் பகுதியில் சுற்றுலாத்துறை சார்பாக இந்திய கைவினைப் பொருட்கள் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதத்தில் நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவத்தால் குளிர்கால சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் எனத் தெரிகிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments