Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி செல்ல வேண்டாம் -கற்பழிப்பு அச்சத்தில் பிரிட்டன் அரசு!

டெல்லி செல்ல வேண்டாம் -கற்பழிப்பு அச்சத்தில் பிரிட்டன் அரசு!
, வியாழன், 3 ஜனவரி 2013 (13:20 IST)
FILE
டெல்லி மாணவிக்கநடந்கொடூகற்பழிப்பஅடுத்தபிரிட்டனஅரசு, தன் நாட்டு மக்களை சுற்றுலாவுக்காடெல்லி செல்வேண்டாமஎன்று அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் மாணவி ஒருவர் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக கற்பழிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், இந்தியாவை மட்டும் அல்லாமல் உலக அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான அச்சத்தை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பிரிட்டன் அரசு, சுற்றுலாவுக்காக டெல்லி செல்வதை பிரிட்டன் மக்கள் தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும் இந்தியாவின் பல பகுதிகளில் கற்பழிப்பு சம்பவங்கள் நடைபெறுவதையும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுவதையும் பிரிட்டன் அரசு சுட்டிகாட்டியுள்ளது.

டிசம்பரில் இந்தியாவின் வட மாநிலங்களில் நிலவும் குளிர், மேற்கத்திய நாட்டவருக்கு மிதமான காலநிலையாக கருதப்படுகின்றது. ஆகவே இந்த மாதத்தில் டெல்லியில் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். டெல்லியின் மையப் பகுதியில் சுற்றுலாத்துறை சார்பாக இந்திய கைவினைப் பொருட்கள் கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதத்தில் நடைபெறும்.

ஆனால் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற இந்தக் கொடூர சம்பவத்தால் குளிர்கால சுற்றுலாப் பயணிகள் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறையும் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil