Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெல்லி கற்பழிப்பு போலவே வேனில் கற்பழிக்கப்பட்ட அமெரிக்க பெண்

டெல்லி கற்பழிப்பு போலவே வேனில் கற்பழிக்கப்பட்ட அமெரிக்க பெண்
, புதன், 3 ஏப்ரல் 2013 (11:26 IST)
FILE
டெல்லி கற்பழிப்பு சம்பவத்தை போலவே அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் பிரேசிலில் ஓடும் வேனில் 3 பேரால், அவரின் நண்பர் முன்பு கற்பழிக்கபட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஒரு பெண் பிரேசிலில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் தங்கி படித்து வந்தார். சம்பவத்தன்று இரவு இவர் தனது உடன் படிக்கும் நண்பருடன் வேனில் பயணம் செய்தார்.வேனில் இவர்களை தவிர வேறு பொதுமக்கள் யாரும் இல்லை. இந்த சந்தர்பத்தை பயன்ப்படுத்திக்கொண்ட வேன் ஓட்டுனர் மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் அமெரிக்க பெண்ணின் நண்பரை கடுமையாக தாக்கிவிட்டு அவரது கண் முன்பே அப்பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 20 - 22 வயது நிரம்பிய இம்மூவரும் 6 மணி நேரங்களுக்கு அப்பெண்ணை துன்புறுத்தி பாலியல் கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். விசாரணையின் போது, இவர்கள் மூவரும் கடந்த மாதம் மற்றொரு பிரேசில் பெண்ணை கற்பழித்திருப்பது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் நடந்தது போலவே நடைப்பெற்றிருக்கும் இச்சம்பவம் பிரேசிலில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil