Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌ர்‌ஜ் பு‌ஷ், முஷாரஃ‌பு‌க்கு அ‌ல் கய்டா கொலை ‌மிர‌ட்ட‌ல்!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2008 (17:46 IST)
ச‌ர்வதேச‌ப் பய‌ங்கரவாத இய‌க்கமான அ‌ல் க‌ய்ட ா, அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஜா‌‌ர்‌ஜ் பு‌ஷ ், பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌ப் ஆ‌கியோரு‌க்கு இணையதள‌ம் மூல‌ம் கொலை ‌மிர‌ட்ட‌ல் ‌விடு‌த்து‌ள்ளது.

அ‌ல் க‌ய்டா இய‌க்க‌த்‌தி‌ன் அமெ‌ரி‌க்க ‌பி‌ரிவு‌த் தலைவ‌ர் ஆதா‌ம் கா‌ன் ‌விடு‌த்து‌ள்ள இணையதள‌ச் செ‌ய்‌தி‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவத ு:

அமெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் நாளை செ‌வ்வா‌ய்‌க் ‌கிழமை முத‌ல் ம‌த்‌திய ‌‌கிழ‌க்கு நாடுக‌ளி‌ல் சு‌‌ற்று‌ப் பயண‌ம் செ‌ய்‌கிறா‌ர். அ‌ப்போது அவரை வரவே‌ற்க பூ மழை பொ‌ழியாது. அத‌ற்கு‌ப் ப‌திலாக கு‌ண்டு மழை பொ‌ழி‌ந்து எ‌ங்க‌ள் இய‌க்க‌த்‌தின‌ர் அவரை வரவே‌ற்பா‌ர்க‌ள்.

இதே போல பா‌கி‌ஸ்தா‌ன் அ‌திப‌ர் ப‌ர்வே‌ஷ் முஷாரஃ‌பையு‌ம் கொலை செ‌ய்ய வே‌ண்டு‌ம். அத‌ற்கு மு‌ஸ்‌லி‌ம்க‌ள் தயாராக வே‌ண்டு‌ம்.

இ‌வ்வாறு அ‌தி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது. இ‌ந்த‌‌வீடியோ செ‌ய்‌தி 50 ‌நி‌மிட‌ங்களு‌க்கு ‌ஓடு‌கிறது.

இதுப‌ற்‌றி வெ‌ள்ளை மா‌ளிகை‌ச் செ‌ய்‌தி‌த் தொட‌ர்பாள‌ர் கா‌‌ர்ட‌ன் ஜா‌ன்‌ட்ரோ‌விட‌ம் கே‌ட்டத‌ற்க ு, இந்த ‌மிர‌ட்டலு‌க்கு எ‌ல்லா‌ம் நா‌ங்க‌ள் பய‌ப்படுவ‌தி‌ல்லை எ‌ன்றா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments