Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜப்பானை முந்தும் இந்தியா, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து உலகிலேயே மூன்றாவது பொருளாதார வல்லரசாக மாறும்

Webdunia
வெள்ளி, 27 டிசம்பர் 2013 (18:09 IST)
FILE
லண்டனை சேர்ந்த நிறுவனம் ஒன்று மேற்கொண்ட கணக்கெடுப்பில் 2028 ஆம் ஆண்டு ஜப்பானை பின்னுக்கு தள்ளி, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு அடுத்து உலகிலேயே மூன்றாவது பொருளாதார வல்லரசாக இந்தியா உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லண்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிபர் உலகின் மிகப்பெரிய பொருளதாரமிக்க நாடுகளின் பட்டியல் குறித்து சிபர் அமைப்பு அட்டவணைப்படுத்தியுள்ளது.

அதில் 2028 ஆம் ஆண்டில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தப்படியாக உலகின் 3வது பெரிய பொருளாதார வல்லரசு நாடாக இந்தியா இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்பட்டியலில் இந்தியா 11 வது இடத்தில் உள்ளது.வரும் 2018 ஆம் ஆண்டு இந்தியா 9 ஆவது இடத்தை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் 2018 ஆம் ஆண்டு ரஷ்யா 6 வது இடத்திலும், மெக்சிகோ 12 வது இடத்தினையும், கொரியா 13 வது இடத்திலும் துருக்கி 17 இடத்தினையும் வகிக்கும்.

மேலும் வரும் 2023 ஆம் ஆண்டு 4 ஆவது இடத்தை பிடிக்கும் இந்தியா, 2028 ஆம் ஆண்டு 3 வது இடத்தை பிடிக்கும் என்று சிபர் அமைப்பு தெரிவித்துள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments