Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோமாலியாவை தாக்கிய புயலால் குறைந்தபட்சம் 100 பேர் பலி

Webdunia
செவ்வாய், 12 நவம்பர் 2013 (12:57 IST)
சோமாலியாவை தாக்கிய கடும் புயலால் குறைந்தபட்சம் 100 பேர் பலியாகியிருக்க கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகிறது.
FILE

சோமாலியாவின் புந்த் லேண்ட் பகுதியில் கரையை கடந்த புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடும் வேகத்தில் வீசிய சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மரங்கள் வேரோடு சாய்ந்தன. வீடுகள் இடிந்தன. சாலைகள், படகுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

தொலைத்தொடர்பு மற்றும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் புந்த் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த பயங்கர புயலுக்கு குறைந்தபட்சம் 100 பேர் பலியாகியுள்ளதாகவும், நூற்றுக்கணக்கானவர்களை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை உயரும் எனவும் தெரிகிறது.

இந்த புயலால் பாதிக்கப்பட்ட ஹுசைன் அப்துல்லாஹி இதுகுறித்து தெரிவிக்கையில், 'இந்த புயலால் பலியான என் குடும்பத்தை சேர்ந்த 10 பேரை இதுவரை புதைத்துள்ளேன், நான் இதுவரை இத்தகைய கொடூர பாதிப்பை பார்த்ததில்லை. இந்த புயலால் ஏற்பட்டிருக்கும் இழப்பு, உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் மிக அதிகமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments