Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சைபர் பாதுகாப்பு: இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா ஆராய்ச்சி

சைபர் பாதுகாப்பு: இஸ்ரேலுடன் இணைந்து இந்தியா ஆராய்ச்சி
, புதன், 4 ஏப்ரல் 2012 (20:56 IST)
சைபர் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்த ஆய்விற்காக இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து நீண்ட கால திட்டத்தை தொடங்க உள்ளன.

அண்மையில் இஸ்ரேல் நிதி அமைச்சர் யுவல் ஸ்டெயினிட்சை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல் சந்தித்து பேசினார்.

அப்போது, இரு நாடுகளுக்கிடையே, கல்வி மற்றும் ஆராய்ச்சிகளுக்கு ஆண்டுக்கு 10 மில்லியன் டாலர் செலவில் நீண்ட கால திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளப்படது.

அதன்படி, இந்தியா மற்றும் இஸ்ரேல் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தங்களுக்குள் புரிந்துணர்வு கொண்டு செயலாற்ற இயலும் என்று அவர்களின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகள் தலா 5 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியில், கூட்டு முறையில், ஆற்றல், உயிரி மருத்துவ அறிவியல், சமூக, மனித வளம் மற்றும் சைபர் பாதுகாப்பு துறைகளில் ஆய்வு மேற்கொள்ள உள்ளன.

இந்த திட்டத்தை இந்தியா சார்பில் பல்கலைக்கழக மானிய குழுவும், இஸ்ரேல் சார்பில் இஸ்ரேல் அறிவியல் அறக்கட்டளையும் ஒருங்கிணைக்கின்றன.

News Summary:
India and Israel have agreed to launch a long-term joint programme worth USD 10 million annually to facilitate research and academic activities benefiting them in areas like renewable and sustainable energies, bio-medical sciences and cyber-security.

Share this Story:

Follow Webdunia tamil