Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சீனா விடுதியில் குண்டு வெடித்து 25 பேர் பலி

சீனா விடுதியில் குண்டு வெடித்து 25 பேர் பலி

Webdunia

, வெள்ளி, 6 ஜூலை 2007 (11:06 IST)
சீனாவில் உள்ள இரவு விடுதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 25 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயமடைந்தனர்.

சீனாவில் லியாவோனிங் மாகாணத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் பிறந்தநாள் விழா நடந்து கொண்டிருந்தது. அப்போது இரவு 9 மணியளவில் குண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 25 பேர் உயிரிழந்தனர். 33 பேர் காயம் அடைந்தனர். விடுதி உரிமையாளரும் குண்டு வெடிப்பில் உயிரிழந்துவிட்டார்.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக விடுதி உரிமையாளரின் மனைவியையும், ஊழியர்களையும் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விடுதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அருகில் இருந்த சில வீடுகளும் சேதம் அடைந்தன. மின்சார கம்பிகள் துண்டிக்கப்பட்டன.

குண்டு வெடிப்பு குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil