Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் அட்டூழியம்!

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2012 (16:31 IST)
இலங்கையின் கிளிநொச்சியில் உள்ள உருத்திரபுரம் பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சிங்கள ராணுவத்தினர் புகுந்து அங்கு வழிபாடு செய்துகொண்டிருந்த தமிழ் மக்களை விரட்டி அடித்து அட்டூழியத்தில் ஈடுபட்டதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

சிவன் கோவிலில் 50-க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவ வீரர்கள் அதிரடியாக புகுந்தனர். பின்னர் கருவறை அருகே நின்று தரிசனம் செய்து கொண்டிருந்த ஆண், பெண்களை சரமாரியாக தாக்கி விரட்டி அடித்தனர். பின்னர் கோவில் அர்ச்சகர்களிடம் சென்று இங்கு பாரம்பரிய புத்தர் சிலை ஒன்று உள்ளது.

அதைத் தங்களிடம் ஒப்படைக்குமாறும் இல்லையேல் கோயிலை இடிப்பதாகவும் மிரட்டியுள்ளனர்.

பின்பு கோயிலுக்கு முன் நின்று கொண்டு வரும் பக்தர்களை மிரட்டத் தொடங்கினர் சிங்கள ராணுவத்தினர்.

இதனால் அப்பகுதி மக்கள் சிவன் கோவில் அருகே செல்ல அஞ்சி நடுங்குகிறார்கள். கிளிநொச்சி பகுதியில் உள்ள தமிழர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள ராணுவம் இதுபோன்ற இழிவான செயல்களில் ஈடுபடுவதாக தமிழ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments