Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிகாகோவில் 7 பள்ளி மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு

Webdunia
புதன், 1 ஜூலை 2009 (09:27 IST)
சிகாகோவின் டிடோரிட் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 7 பள்ளி மாணவர்கள் மீது 2 மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 3 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இதுதொடர்பாக டிடோரிட் காவல்துறை பேச்சாளர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அடையாளம் தெரியாத 2 மர்ம நபர்கள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர்.

இதில் 14 முதல் 17 வயதிற்கு உட்பட்ட மூன்று மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியதாகத் தெரிவித்தார்.

டிடோரிட் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வரும் இந்த மாணவர்கள், அந்நாட்டு நேரப்படி மதியம் 2.30 மணியளவில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments