Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சார்க் மாநாட்டின்போது போர் நிறுத்தம்: விடுதலைப் புலிகள் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (12:33 IST)
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெறவுள்ள தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு மாநாட்டின்போது போர் நிறுத்தத்தைக் கடைபிடிக்கப்போவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் துறைப் பணியகம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், இலங்கையில் சார்க் மாநாடு நடைபெறவுள்ளதையடுத்து இம்மாதம் 26ஆம் தேதிமுதல் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 4ஆம் தேதிவரை தாங்கள் போர் நிறுத்த்தைக் கடைபிடிக்கப்போவதாக கூறியுள்ளது.

“பரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு சார்க் மாநாடு 15வது தடவையாகக் கூடுவதையிட்டு தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத ் தெரிவித்துக்கொள்கின்றோம ்” என்று அந்த அறிக்கையில் புலிகள் கூறியுள்ளனர்.

ஆயினும் தங்களது நல்லெண்ண நடவடிக்கைகளை மதிக்காமல் சிறிலங்கப் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினால் தமது மக்களைக் காக்க தற்காப்பு நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபடுவோம் என்று புலிகள் கூறியுள்ளனர்.

‌விடுதலை‌ப்பு‌லிக‌‌ளி‌ன் முழு அ‌றி‌க்கை...

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments