Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரத் பொன்சேகா விடுதலை; ராஜபக்ச உத்தரவு!

சரத் பொன்சேகா விடுதலை; ராஜபக்ச உத்தரவு!
, ஞாயிறு, 20 மே 2012 (11:30 IST)
FILE
ராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் சரத் பொன்சேகாவுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் சரத் பொன்சேகாவை விடுதலை செய்து அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார். நேற்று இரவு கத்தார் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதற்கு முன்னதாக இந்த உத்தரவில் கையெழுத்திட்டார்.

ஒரு புறம் அமெரிக்காவின் நெருக்கடி அதிகமாகியதால் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யும் நிர்பந்தத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் என்று கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இலங்கை ராணுவ முன்னாள் தலைமை தளபதி சரத் பொன்சேகா. இவர் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிக் கட்ட போரை முன் நின்று நடத்தியவர். போர் முடிந்த பிறகு அதிபர் ராஜபக்சேவுடன் இவருக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

எனவே, இவர் பதவியில் இருந்து விலகி அரசியல்வாதி ஆனார். பின்னர் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதை தொடர்ந்து, இலங்கை அரசுக்கும், அதிபர் ராஜபக்சேவுக்கும் எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.

அவருக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அதிபர் ராஜபக்சே, சரத் பொன்சேகாவின் மனைவி அனோமாவை சந்தித்து பேசினார்.

இதைத் தொடர்ந்து சரத் பொன்சேகா விரைவில் விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்ப்பதாக அனோமா தெரிவித்தார். இதற்கிடையே ராணுவத்தில் இருந்து தப்பி ஓடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் சரத் பொன்சேகாவுக்கு கொழும்பு உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் சரத் பொன்சேகாவை விடுதலை செய்து அதிபர் ராஜபக்சே உத்தரவிட்டார். நேற்று இரவு கத்தார் நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அதற்கு முன்னதாக இந்த உத்தரவில் கையெழுத்திட்டார்.

அந்த உத்தரவு நகல் அதிபரின் தலைமை அதிகாரி காமினி செனாரத்திடம் வழங்கப்பட்டுள்ளது. அதை அவர் சட்ட அமைச்சகத்திடம் நாளை (21-ந்தேதி) வழங்குகிறார். இந்த தகவலை அதிபரின் செய்தி தொடர்பாளர் பாண்டுலா ஜெயசேகரா நிருபர்களிடம் தெரிவித்தார்.

எனவே, இன்னும் ஓரிரு நாளில் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil