Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரத் பொன்சேகா கைது: அதிபர் ராஜபக்சவுடன் ரனில் விக்ரமசிங்க சந்திப்பு

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2010 (18:39 IST)
கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரனில் விக்ரமசிங்க, இன்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பு இலங்கை அதிபர் மாளிகையில் நடைபெற்றுது.இந்த சந்திப்பின்போது,கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பொன்சேகாவை விடுவிக்க வேண்டுமென விக்ரமசிங்க, ராஜபக்சவிடம் கோரியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், தற்போது விடுதலை கோரி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு மீதான தீர்ப்புக்குப் பின்னர், அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக ரனிலிடம், ராஜபக்ச உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையே, பொன்சேகாவை சந்திப்பதற்கான சிறப்பு அனுமதியை வழங்குமாறும் ரனில் கோரியதாகவும்,ஆனால் அதற்கு அனுமதி கிடைத்ததா என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments