Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோத்தபாயவுடன் கே.பி. திடீர் சந்திப்பு

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2011 (18:35 IST)
இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இன்று திடீரென சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இந்த பேச்சுவார்தையின் போது வடமாகாணத்தின் அரசியல் நிலவரம் மற்றும் கள நிலவரம் போன்றவை தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகவும், தாம் முன்னர் வட பகுதிக்கு விஜயம் செய்த போது மக்கள் முன் வைத்த கோரிக்கைகளை கே.பி.விளக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கோத்தபாயவிடம் தாம் முன்வைத்த பல கோரிக்கைகளில் மூன்று கோரிக்கைகளுக்கு அவரது அனுமதி கிடைத்துள்ளதாக கே.பி. தெரிவித்துள்ளார்.

குமரன் பத்மாநாதன் கடந்த இரண்டு தினங்களாக வடக்கு பகுதியில் மேற்கொண்ட விஜயத்தின் போது பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்ட்ரேலியா, கனடா ஆகிய நாடுகளை சேர்ந்த 15 பேர் அடங்கிய குழுவொன்றும் வட மாகாணத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை உயரும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம்..! தாமாக முன்வந்து விசாரிக்கும் குஜராத் நீதிமன்றம்..!

இந்தியாவில் தாய்ப்பாலை விற்பனை செய்ய அனுமதி இல்லை: மத்திய அரசு அறிவிப்பு..!

Show comments