Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஸாப் ஒப்புதல் : பாக். ஏற்க மறுப்பு

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2009 (20:15 IST)
கஸாப் ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.

மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் கைதான ஒரே குற்றவாளியான அஜ்மல் கஸாப், தன் மீதான குற்றச் சாற்றுகளை ஒப்புக் கொண்டு, மும்பை நீதிமன்றத்தில் நேற்று வாக்குமூலம் அளித்தார்.

இந்நிலையில், இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் சவுத்ரி முக்தாரிடம் கேட்டபோது, அஜ்மல் கஸாப் அளித்துள்ள ஒப்புதல் வாக்கு மூலம் "ஒரு பகுதி" மட்டுமே என்றும், இந்திய சிறை அதிகாரிகளின் பிடியில் இருக்கும் ஒருவர், நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் பதிலளித்தார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments